TNPSC Thervupettagam

அசாமின் பாரம்பரியத் தயாரிப்புகள் – புவிசார் குறியீடு

October 9 , 2024 45 days 134 0
  • பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் பல தனித்துவமான அரிசித் தேறல் உட்பட அசாம் பகுதியினைச் சேர்ந்த பின்வரும் எட்டு தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப் படுகிறது.
  • முதலாவது தயாரிப்பு ஆனது அரிசித் தேறல் வகையான ‘போடோ ஜூ க்வ்ரான்’ என்ற பொருளில் அதிக சதவீத ஆல்கஹால் (சுமார் 16.11%) உள்ளது.
  • இரண்டாவது வகையானது 'மைப்ரா ஜூ பித்வி' ஆகும் என்ற நிலைமையில் இது உள் நாட்டில் 'மைப்ரா ஜ்வு பித்வி' அல்லது 'மைப்ரா ஸ்வு பித்வி' என்று அழைக்கப்படுகிறது.
  • ‘போடோ ஜூ கிஷி’ எனப்படும் மூன்றாவது வகையும் மிகவும் பாரம்பரியமாக புளிக்க வைக்கப் பட்ட அரிசியிலிருந்து பெறப்படும் மதுபானமாகும்.
  • முக்கியமான மற்றும் விரும்பத்தகு உணவான ‘போடோ நாபம்’ எனப்படும் புளித்த மீன் உணவு வகைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ‘போடோ ஒன்ட்லா’ எனப்படும் மற்றொரு உணவு வகையானது, பூண்டு, இஞ்சி, உப்பு மற்றும் காரத்துடன் கூடிய அரிசித் தூள் மணமுடன் கூடிய ஒரு குழம்பு வகையாகும்.
  • ‘போடோ குவ்கா’ உணவு வகையும் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • சணல் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பகுதியளவு புளித்த உணவான ‘போடோ நர்சி’ என்ற உணவு வகையும் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • ‘போடோ அரோனை’ என்ற சிறிய, அழகான துணியும் புவி சார் குறியீட்டினைப் பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்