ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அல்லது AFSPA சட்டம் அசாமின் நான்கு மாவட்டங்களில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அசாமில் உள்ள திப்ருகர், டின்சுகியா, சிவசாகர் மற்றும் சராய்தியோ ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே AFSPA அமலில் இருக்கும்.
ஜோர்ஹாட், கோலாகாட், கர்பி அங்லாங் மற்றும் டிமா ஹசாவோ ஆகிய இடங்களில் அக்டோபர் 01 முதல் AFSPA சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
AFSPA சட்டமானது, பாதுகாப்புப் படை வீரர்கள் எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் யாரையும் கைது செய்யவும் வேண்டி அதிகாரம் அளிக்கிறது.
படை வீரர்கள் யாரையாவது சுட்டுக் கொன்றால் அதற்காக கைது செய்யப் படுவதில் இருந்தும், வழக்குத் தொடுப்பதிலிருந்தும் விலக்கு அளிக்கிறது.