ராஜஸ்தானின் பொக்ரான் துப்பாக்கி சுடுதல் வரம்புப் பகுதியில் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட M777 அல்ட்ராலைட் ஹோவிட்சர் என்ற கருவியின் சோதனையினை இந்திய இராணுவம் மீண்டும் தொடங்க உள்ளது.
துப்பாக்கி சுடுதலின் போது தவறான வெடிப் பொருட்களினால் ஏற்பட்ட உருள்கலன் வெடிப்பின் காரணமாக செப்டம்பர் 2017-ல் இடை நிறுத்தப்பட்ட பிறகு இச்சோதனை மறுபடியும் தொடங்கப்பட உள்ளது.
இத்தகைய பீரங்கி துப்பாக்கிகள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலிய இராணுவங்களினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1980-களின் பிற்காலத்தில் தொடங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி துப்பாக்கிக்குப் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களில் கையெழுத்திட்ட பீரங்கி துப்பாக்கிக்கான ஒப்பந்தங்களில் M777 முதலாவது ஆகும்.