TNPSC Thervupettagam

அசாம்-மிசோரம் எல்லைப் பிரச்சனை

August 13 , 2022 708 days 371 0
  • ஐஸ்வால் சங்கத்தில் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் அமைதியை மேம்படுத்தவும் அதனை நிலை நாட்டவும் அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் உயர்மட்டக் குழுக்கள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.
  • இரண்டு வடகிழக்கு அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதற்கான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
  • பல தசாப்தங்களாக நிலவும் எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
  • மிசோரம் மற்றும் அசாம் இடையே பல தசாப்தங்களாக நிலவும் ஒரு எல்லைப் தகராறானது, முக்கியமாக 1875 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் காலனித்துவ ஆட்சியில்  மேற்கொள்ளப்பட்ட இரண்டு எல்லை நிர்ணய அறிவிப்புகளில் இருந்து உருவானது.
  • வங்காளக் கிழக்கு எல்லை ஒழுங்குமுறையின் கீழ் 1875 ஆம் ஆண்டு அறிவிப்பில் குறிப்பிடப் பட்ட எல்லை நிர்ணயத்தை மிசோரம் அரசு ஏற்றுக் கொண்டது.
  • ஆனால் அசாம் மாநில அரசானது, 1933 ஆம் ஆண்டின் அறிவிப்பின் கீழ் குறிப்பிடப் பட்ட எல்லை நிர்ணயம் தனது அரசியலமைப்பு எல்லைக்குட்பட்டது என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்