TNPSC Thervupettagam

அசாம் விருதுகள்

June 11 , 2021 1172 days 511 0
  • சமூகத்திற்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் ஒருவருக்கு அசோம் ரத்னா விருதானது வழங்கப்பட இருக்கின்றது.
  • மேலும் அசோம் பிபூசன், அசாம் பூசன் மற்றும் அசோம் ஸ்ரீ ஆகிய விருதுகளை உருவாக்குவதற்கும் அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  
  • இந்த விருதானது ஒவ்வோர் ஆண்டும் முறையே 3 நபர், 5 நபர் மற்றும் 10 நபர்களுக்கு வழங்கப்படும்.
  • இந்த விருதுகளோடு சேர்த்து பணத்தொகையும் வழங்கப்படும்.
    • அசோம் ரத்னா விருதுடன் 5 லட்சம் ரூபாய்,
    • அசோம் பிபூசன் விருதுடன் 3 லட்சம் ரூபாய்,
    • அசோம் பூசன் விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும்
    • அசோம் ஸ்ரீ விருதுடன் 1 லட்சம் ரூபாய்.

இதர முடிவுகள்

  • இலக்கிய எழுத்தாளர் முனைவர் ஹோமென் போர்கோஹைன் அவர்களது பிறந்த நாளன்று (டிசம்பர் 07) அவருடைய பெயரில் இலக்கிய ஓய்வூதியமானது வழங்கப் படும்.
  • அர்ஜுன் போகேஷ்வர் பரூவா அவர்களின் பிறந்த நாளன்று (செப்டம்பர் 03) அவருடைய பெயரில் விளையாட்டுத் துறை ஓய்வூதியமானது வழங்கப்படும்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 17 ஆம் தேதியன்று ஆர்டிஸ்டே விருதானது வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்