TNPSC Thervupettagam

அசையூண் இரைப்பை அமிலத்தேக்க நோய்

January 17 , 2022 952 days 464 0
  • இனிப்புப் பொங்கலை பசுக்களுக்கு அதிகளவில் வழங்குவது நல்லதல்ல என்றும், அதனால் மிதத் தீவிரமான அசையூண் இரைப்பை அமிலத் தேக்க நோய் (Subacute Ruminal Acidosis) ஏற்படுவதாகவும் கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • பசுவின் வயிற்றில் சேரும் அதிசர்க்கரை உணவுகள் அசாதாரணமான முறையில் நொதிக்கப்பட்டு, பசுக்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு தீவிர உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.
  • தீவிரமான பாதிப்பு ஏற்படுகையில் இது அசையூண் இரைப்பை அமிலத் தேக்க நோய் என்று அழைக்கப்படுகிறது.
  • இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் கறவை மாடுகளைப் பாதிக்கின்ற இது கால்நடைகள் மீதான ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும்.
  • அமிலத் தேக்க நோயானது பொதுவாக அதிக அளவு நொதிக்கக் கூடிய, கார்போ ஹைட்ரேட் நிறைந்த தீவனங்களை உட்கொள்வதனால் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்