TNPSC Thervupettagam
January 26 , 2018 2496 days 1424 0
  • இந்தியாவின் உயரிய அமைதிக்கான இராணுவ விருதான அசோக் சக்ரா விருது வீர மரணம் எய்திய இந்திய வான் படையின் கருடா பிரிவின் கமாண்டோவான  கார்போரால் ஜோதி பிரகாஷ் நிராலாவிற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.
  • மறைவிற்கு பிறகு அசோக் சக்ரா விருதைப் பெறும் விமானப் படைப்பிரிவின் முதல் கமாண்டோ இவரேயாவார்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாட்டின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற நிராலா, சண்டையின்  போது வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய விமானப் படையினுடைய கருடா சிறப்புப் படைப் பிரிவின் ஓர் அங்கமாக நிராலா பணியாற்றினார்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘‘ஆப்ரேஷன் ரக்ஷாக்“-ன் கீழ் கருடா சிறப்புப் படையின் ஓர் பிரிவானது  ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவோடு இணைக்கப்பட்டு  எல்லைப் பாதுகாப்பு  நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்