TNPSC Thervupettagam

அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள இனங்களின் வளம் 2024

October 22 , 2024 40 days 134 0
  • 'மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள விலங்கினங்களின் கிராம அளவிலான பரவல் வரைபடம்' என்ற ஆய்விற்காக சுமார் 512 வகையான விலங்கினங்களின் புவியிடத் தகவல் முறைமை அடிப்படையிலான தரவுத்தளத்தினை உயிரியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • சுமார் 98 இனங்களுடன், தமிழ்நாட்டின் வால்பாறை பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் செழுமையின் அடிப்படையில் தரநிலைப் படுத்தப்பட்டுள்ள 7,630 கிராமங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் 133 வகையான மீன்கள், 81 வகையான பறவைகள், 91 வகையான ஊர்வன, 79 வகையான நீர் நில வாழ்விகள், 47 வகையான பூச்சிகள், 37 வகையான பாலூட்டிகள் மற்றும் பல இடம் பெற்றுள்ளன.
  • 512 இனங்களில், 27 இனங்கள் மிக அருகி வரும் நிலையில் உள்ளன, 131 அருகி வரும் நிலையில் உள்ளன என்பதோடு 117 எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலும், மற்றும் 88 அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாகவும், மற்றும் மீதமுள்ள இனங்கள் தீ வாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும், தரவுக் குறைபாடு கொண்ட இனமாகவும் அல்லது மதிப்பீடு செய்யப்படாத இனமாகவும் உள்ளன.
  • கோவை மாவட்டத்தில் உள்ள மலை வாழிடமான வால்பாறை 98 இனங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள கண்ணன் தேவன் மலைகள் (83), மும்பை (69), குட்டம்புழா (64), பரியாரம் (61), மற்றும் கேரளாவில் உள்ள குமிளி (57) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • மாநில வாரியாக, சுமார் 354 வகையான அருகி வரும் விலங்கினங்களுடன் கேரளா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (274), கர்நாடகா (237), மகாராஷ்டிரா (171), கோவா (104), மற்றும் குஜராத் (37) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்