TNPSC Thervupettagam

அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் - மலேரியா இல்லாத நாடுகள்

April 7 , 2023 600 days 327 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை மலேரியா இல்லாத நாடுகள் என்று அறிவித்துச் சான்றளித்துள்ளது.
  • இந்தச் சான்றிதழானது, இந்த இரு நாடுகளிலிருந்து மலேரியா நோயினை முற்றிலுமாக அழிப்பதற்காக அந்நாடுகள் மேற்கொண்ட நூற்றாண்டு காலத் தொடர் முயற்சியைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
  • மலேரியா ஒழிப்புச் சான்றிதழானது, ஒரு நாட்டில் மலேரியா நோய் இல்லாத நிலையை உலக சுகாதார அமைப்பானது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகும்.
  • இந்த நிலையினை எய்துவதற்காக, அனோபிலிஸ் வகை கொசுக்களால் பரவும் மலேரியாவின் தொற்றுச் சங்கிலியானது, குறைந்தது மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் தடுக்கப்பட்டது.
  • உள்நாட்டில் பரவும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (பி.வைவாக்ஸ்) மலேரியாவின் கடைசிப் பாதிப்பானது அஜர்பைஜான் நாட்டில் 2012 ஆம் ஆண்டிலும், தஜிகிஸ்தான் நாட்டில் 2014 ஆம் ஆண்டிலும் பதிவானது.
  • இந்த அறிவிப்பின் மூலம், மொத்தம் 41 நாடுகளும் 1 பிரதேசமும் மலேரியா இல்லாத நாடுகள் என்ற உலக சுகாதார அமைப்பின் சான்றிதழினைப் பெற்றுள்ளன.
  • இதில் இடம் பெற்றுள்ள 21 நாடுகள் ஐரோப்பியப் பிராந்தியத்தைச் சேர்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்