அஞ்சல் அலுவலக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், 2024
December 30 , 2024 61 days 92 0
அஞ்சல் அலுவலகச் சட்டம், 2023 என்ற சட்டத்தின் கீழ் புதிய துணைச் சட்டங்களாக அஞ்சல் அலுவலக விதிகள், 2024 மற்றும் அஞ்சல் அலுவலக விதிமுறைகள், 2024 ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு அஞ்சலக விதிகள் ஆனது அஞ்சலக/தபால் நிலையங்களால் வழங்கப் படும் சேவைகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு தபால் அலுவலக ஒழுங்குமுறை விதிகள் ஆனது, நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் ஆக்கப் பூர்வச் சேவைகள் மற்றும் இதர சேவைகளின் விவரங்கள் மற்றும் செயல்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியது.
பல்வேறு சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்காக என்று, பண அஞ்சல் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு ஆனது 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
முந்தைய இந்திய அஞ்சல் அலுவலகச் சட்டம், 1898 மற்றும் இந்திய அஞ்சல் அலுவலக விதிகள், 1933 ஆகியவற்றின் விதிகளின் படியே தற்போதுள்ள அஞ்சல் பதிவு வழங்கப் படுகிறது.