TNPSC Thervupettagam

அஞ்சல் துறையின் காப்பீட்டுத் திட்டம்

October 14 , 2017 2600 days 978 0
  • நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் மலிவு விலையிலான காப்பீட்டு சேவையை வழங்கும் வகையில்,
  1. குறிப்பாக கிராம பகுதி மக்களுக்கென சம்பூரண பீமா கிராம் யோஜனா திட்டத்தையும்
  2. அரசு ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களுக்கு அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டு சேவையை வழங்கும் வகையில் PLI விரிவாக்கத் திட்டத்தையும் (PLI-Life Insurance) மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • சம்பூரண பீமா கிராம் யோஜனா - இத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு நபராவது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் கொண்டு வரப்படுவர்.
  • அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் அஞ்சல் ஆயுள் காப்பீடானது இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் (BSE – Business Stock Exchange) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அல்லாத ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்