இந்திய ரிசர்வ் வங்கியானது, சிறுகடன் வங்கிகளுக்கு மட்டுமல்லாத அனைத்து கடன் வழங்கு நிறுவனங்களுக்கும் அடமானம் அல்லாத சிறு கடன்களை வழங்க முன் வந்து உள்ளது.
தற்போதைய ஒழுங்குமுறைக் கட்டமைப்பானது குறைந்த வருமானமுடைய குடும்பங்களையும் கடன் பெறச் செய்தல் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனைத் திரும்பப் பெறும் சமயத்தில் மேற்கொள்ளும் சில கடுமையான நடைமுறைகளிலிருந்து கடனாளிகளைப் பாதுகாத்தல் போன்ற ஒரு நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையானது வங்கிசாரா கடன் நிறுவனங்களுக்கு – சிறு கடன் வங்கிக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தியாவில் ஒரு லட்சத்திற்குக் குறைவான கடன்கள் சிறுகடன்களாகக் கருதப் படுகின்றன.