அடல் ஓய்வூதியத் திட்டமானது (Atal Pension Yojana - APY) 1.9 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
இது அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வேறு எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் வராத தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்குவதற்கான அரசாங்கத்தின் ஒரு முதன்மையான ஓய்வூதியத் திட்டமாகும்.
பொதுத் துறை வங்கிகளிடையே, பாரத இந்திய வங்கியின் மூலம் கிட்டத்தட்ட 11.5 லட்சம் சந்தாதாரர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இத்திட்டத்தில் தனியார் துறை வங்கிப் பிரிவின் கீழ், எச்டிஎஃப்சி வங்கியானது சந்தாதாரர்கள் சேர்க்கைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கின்றது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் APYன் கீழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 2.25 கோடியாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, அவர்களின் எண்ணிகையை விரிவுபடுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA - Pension Fund Regulatory and Development Authority) திட்டமிட்டுள்ளது.