TNPSC Thervupettagam

அடல் ஓய்வூதியத் திட்டம்

November 10 , 2019 1715 days 605 0
  • அடல் ஓய்வூதியத் திட்டமானது (Atal Pension Yojana - APY) 1.9 கோடிக்கும் மேற்பட்ட  சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
  • இது அமைப்புசாராத்  துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வேறு எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் வராத தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்குவதற்கான அரசாங்கத்தின் ஒரு முதன்மையான ஓய்வூதியத் திட்டமாகும்.
  • பொதுத் துறை வங்கிகளிடையே, பாரத இந்திய வங்கியின் மூலம் கிட்டத்தட்ட 11.5 லட்சம் சந்தாதாரர்கள் இதில் இணைந்துள்ளனர்.
  • இத்திட்டத்தில் தனியார் துறை வங்கிப் பிரிவின் கீழ், எச்டிஎஃப்சி வங்கியானது சந்தாதாரர்கள் சேர்க்கைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் APYன் கீழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 2.25 கோடியாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, அவர்களின் எண்ணிகையை விரிவுபடுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA - Pension Fund Regulatory and Development Authority) திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்