அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் (Employee State Insurance) அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை 1948 ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கான அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற நபர்களுக்காக அங்கீகரித்துள்ளது.
இத்திட்டம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பின்மையின் போதும், அவர்கள் எப்பொழுது புதிய வேலையை தேடுகிறார்களோ அப்பொழுதும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக உதவித்தொகையை செலுத்தும் ஒரு வசதியாகும்.