நிலத்தடி நீர்மட்டக் குறைவை கையாளுவதற்காக மத்திய அரசு அடல் பூஜல் யோஜனா (Atal Bhujal Yojana) எனும் திட்டத்தை வகுத்துள்ளது.
மத்திய நீர்வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் (Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation ) கீழ் ஏற்படுத்தப்பட உள்ள இத்திட்டமானது கேபினேட் குழுவின் இசைவிற்காக காத்திருப்பில் உள்ளது.
நிலத்தடி நீர் மட்டத்தை மீள்நிரப்புதலும் (Recharge), வேளாண்சார் நடவடிக்கைகளுக்கு போதிய நீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
புறப்பரப்பு நீர் நிலை அமைப்புகளை புத்துயிரூட்டுவதன் மூலம் குறிப்பாக ஊரகப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டம் 5 ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.
அமைச்சரவையின் அனுமதி கிட்டியவுடன், நீர் பற்றாக்குறையுடைய மாநிலங்களான குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது.
நிலத்தடி நீர் மீது மத்திய அரசிற்கு எத்தகு அதிகாரமும் கிடையாது.
1882ஆம் ஆண்டுச் சட்டமான இந்திய எளிமைப்பாட்டுச் சட்டம் மட்டுமே (Indian Easement Act - 1882) நிலத்தடி நீர் தொடர்பான இந்தியச் சட்டமாகும்.
அடல் பூஜல் யோஜனா நிலத்தடி நீர் அளிப்பு சார் மேலாண்மை (Demand side management) மீது கவனம் செலுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது..
குறைந்தபட்ச நீர் பயன்பாட்டின் மூலம் எப்படி நீர் தேவைகளை பூர்த்தி செய்கிறோம் என்பதே நீர் அளிப்பு சார் மேலாண்மை எனப்படும்.