மத்திய அமைச்சரவை 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்த அடல் பென்சன் திட்டத்தை காலவரையறையின்றி நீட்டிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் இது இத்திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தி அத்திட்டத்தை ஒரு திறந்தவெளித் திட்டமாக தக்கவைத்துள்ளது.
மேலும் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இதில் பங்கேற்பதற்கான வயது வரம்பு திருத்தப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கான வயது 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் விபத்து காப்பீட்டிற்கான வரம்பாக முன்பு இருந்த 1 லட்சம் ரூபாய் நிலையிலிருந்து இரு மடங்காக 2 லட்ச ரூபாய் என்ற நிலையைக் கொண்டிருக்கும்.
இத்திட்டத்தின் மிகைப் பற்று வசதியும் 5000 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.