TNPSC Thervupettagam

அடிப்படை கால்நடை வளர்ப்புப் புள்ளிவிவரங்கள் 2024

December 1 , 2024 34 days 96 0
  • இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் இருந்த காலக் கட்டத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்தப் பால் உற்பத்தியானது சுமார் 239.30 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் இதில் 5.62% வளர்ச்சி பதிவாகியுள்ளது என்பதோடு இது 2014-15 ஆம் ஆண்டில் 146.3 மில்லியன் டன்னாக இருந்தது.
  • மேலும், 2023-24 ஆம் ஆண்டில் பதிவான பால் உற்பத்தி ஆனது 2022-23 ஆம் ஆண்டின் மதிப்பீட்டை விட 3.78% அதிகரித்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஐந்து மாநிலங்கள் -மொத்தப் பால் உற்பத்தியில் 16.21% பங்குடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் (14.51%), மத்தியப் பிரதேசம் (8.91%), குஜராத் (7.65%), மற்றும் மகாராஷ்டிரா (6.71%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • 2023-24 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியானது, 142.77 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் பதிவான 78.48 பில்லியன் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் 6.8% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • மேலும், 2022-23 ஆம் ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் சுமார் 3.18% உற்பத்தி அதிகரித்துள்ளது.
  • மொத்த முட்டை உற்பத்தியில் சுமார் 17.85% பங்குடன் ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (15.64%), தெலுங்கானா (12.88%), மேற்கு வங்காளம் (11.37%) மற்றும் கர்நாடகா (6.63%) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • 2023-24 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தியானது, 10.25 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 6.69 மில்லியன் டன்கள் என்ற அளவினை விட கடந்த 10 ஆண்டுகளில் இறைச்சி உற்பத்தியில் 4.85% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • மேலும், 2022-23 ஆம் ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி சுமார் 4.95% அதிகரித்துள்ளது.
  • இறைச்சி உற்பத்தியில் முக்கிய பங்களிப்பாளராக மேற்கு வங்காளம் 12.62% பங்குடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (12.29%), மகாராஷ்டிரா (11.28 %), தெலுங்கானா (10.85%) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (10.41%) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • 2023-24 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்தக் கம்பளி உற்பத்தியானது, 33.69 மில்லியன் கிலோவாக மதிப்பிடப் பட்டுள்ளது என்பதோடு இதில் கடந்த ஆண்டை விட சுமார் 0.22% என்ற அளவிற்கு சிறிதளவு வளர்ச்சி மட்டுமே பதிவாகியுள்ளது.
  • இது 2019-20 ஆம் ஆண்டில் 36.76 மில்லியன் கிலோவாகவும், முந்தைய ஆண்டில் 33.61 மில்லியன் கிலோவாகவும் இருந்தது.
  • 47.53% பங்குகளுடன் இராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது, அதனைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் (23.06%), குஜராத் (6.18%), மகாராஷ்டிரா (4.75%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4.22%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ள அதே சமயம் முட்டை உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்