TNPSC Thervupettagam

அடிப்படை கால்நடை வளர்ப்பு குறித்த புள்ளி விவரங்கள் 2023

November 30 , 2023 234 days 240 0
  • தேசியப் பால் தினத்தையொட்டி, 2022-23 ஆம் ஆண்டிற்கான அடிப்படை கால்நடை வளர்ப்புப் புள்ளிவிவரங்கள் அறிக்கையானது அசாமின் கௌகாத்தியில் வெளியிடப் பட்டது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி 22.81% அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • பால் உற்பத்தியில் 2018-19 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் 22.81% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டு மதிப்பீட்டை விட 2022-23 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 3.83% அதிகரித்துள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் (14.44 %), மத்தியப் பிரதேசம் (8.73 %), குஜராத் (7.49 %), மற்றும் ஆந்திரப் பிரதேசம் (6.70 %) ஆகியவை பால் உற்பத்தியில் நாட்டின் முன்னணி மாநிலங்களாக உள்ளன.
  • 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தி 9.77 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மொத்த இறைச்சி உற்பத்தியில் 12.20% பங்குடன் உத்தரப் பிரதேச மாநிலம் பெரும் பங்கினைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் (11.93 %), மகாராஷ்டிரா (11.50 %), ஆந்திரப் பிரதேசம் (11.20 %) மற்றும் தெலுங்கானா (11.06 %) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கம்பளி உற்பத்தி 33.61 மில்லியன் கிலோவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நாட்டின் மொத்தக் கம்பளி உற்பத்தியில் ராஜஸ்தான் 47.98% பங்கினைக் கொண்டு உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் (22.55%), குஜராத் (6.01%), மகாராஷ்டிரா (4.73%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4.27%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்