TNPSC Thervupettagam

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2023 – டிசம்பர் 02

December 2 , 2023 360 days 199 0
  • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 02 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் அடிமைத் தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது, உலகில் இன்றும் நிலவி வரும் அடிமைத் தனம் குறித்த கவனத்தை ஈர்க்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அடிமைத்தனம் உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.
  • 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையானது தனி நபர்களின் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ளப் படும் அத்துமீறல்கள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
  • 1985 ஆம் ஆண்டில், அடிமைத்தனம் தொடர்பான பணிக்குழுவின் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது டிசம்பர் 02 ஆம் தேதியை அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான உலக தினத்தினை அறிவிக்குமாறு பரிந்துரைத்தது.
  • 1995 ஆம் ஆண்டில், இது உலகம்  முழுவதும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறியப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் கருத்துரு – மாறிவரும் கல்வியின் மூலம் இனவெறியின் அடிமைத்தன மரபினை எதிர்த்துப் போராடுதல் - என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்