TNPSC Thervupettagam

அடிமை வணிகம் மற்றும் அவற்றை ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 23

August 25 , 2018 2283 days 868 0
  • உலகம் முழுவதும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அடிமை வணிகம் மற்றும் அவற்றை ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.
  • அட்லாண்டிக் அடிமை வணிகத்தை நினைவு கூறுவதற்காக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organisation) இத்தினத்தை தேர்ந்தெடுத்தது.
  • தற்பொழுது ஹய்தி என்றறியப்படும், சாந்தோ டோமிங்கோ தீவின் மேற்குப் பகுதியில் 1791ஆம் ஆண்டு ஏற்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் கிளர்ச்சியைக் குறிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். அவ்வாறு விற்கப்பட்டவர்கள் அடிமை அமைப்பிற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர்.
  • இந்த ஹய்தி புரட்சியானது 1804ஆம் ஆண்டில் அடிமைகளின் சுதந்திரம் மற்றும் விடுதலைக்கு இட்டுச் சென்றது.
  • இந்த நாள் முதன்முறையாக பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக 1998ஆம் ஆண்டு ஹய்தியிலும் 1999ஆம் ஆண்டு செனெகலிலும் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்