அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 23
August 28 , 2024 88 days 69 0
இந்த நாள் அடிமை வர்த்தகத்தின் அவல நிலையினை அனைத்து மக்களின் நினைவில் பதிய வைக்கும் நோக்கத்தில் அனுசரிக்கப்படுகிறது.
இது முதன்முதலில் பல நாடுகளில் குறிப்பாக ஹைத்தி (1998) மற்றும் செனகலில் உள்ள கோரே தீவு (1999) ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.
ஆனால் இந்த நாளுக்கான சர்வதேச அங்கீகாரம் ஆனது 2016 ஆம் ஆண்டில் தான் யுனெஸ்கோ அமைப்பினால் வழங்கப்பட்டது.
1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிப்புச் சட்டம் ஆனது பிரித்தானிய பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, 1834 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று அரச ஒப்புதலைப் பெற்றது.
1500-1800 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 12 மில்லியன் அடிமைகள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
1804 ஆம் ஆண்டில், உலகின் முதல் அடிமை முறை இல்லாத நாடாக ஹைதி மாறியது.