தற்போதைய LVM3 ஏவு வாகனத்துடன் உடன் ஒப்பிடும் போது NGLV மூன்று மடங்கு அதிக அளவிலான கருவிகளை கொண்டு செல்லும் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 1.5 மடங்கு மட்டுமே அதிகமாக இருக்கும்.
மறுபயன்பாட்டு அம்சங்களை மிகவும் அதிகம் கொண்டுள்ள இந்த ஏவு வாகனமானது, விண்வெளியினை மிகவும் மலிவான செலவில் அணுகுவதை உறுதி செய்து, பசுமை நுட்பம் சார்ந்த மாதிரி உந்துவிசை மீதான அமைப்புகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
NGLV ஆனது, புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதைக்கு (LEO) அதிகபட்சமாக சுமார் 30 டன்கள் எடையுள்ள கருவிகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முதல் கட்டப் பாகத்தினைக் கொண்டு உள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள PSLV, GSLV, LVM3 மற்றும் SSLV போன்ற ஏவு வாகனங்கள் மூலம் 10 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை LEO சுற்றுப்பாதைக்கும், 4 டன் புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கும் (GTO) கொண்டு செல்லும் நுட்பத்தில் இந்தியாவானது தன்னிறைவு அடைந்துள்ளது.