ரிசர்வ் வங்கியானது நாட்டில் டிஜிட்டல் பண வழங்கீட்டுச் சூழலியலின் பாதுகாப்பை மேம்படுத்த பற்று, கடன் மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கு அடையாள தகவல் முறையை அனுமதித்துள்ளது.
இந்த அடையாளத் தகவல் முறையானது 16 இலக்க கணக்கு எண், காலாவதி தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகிய முக்கியமான தகவல்களுக்கு கூடுதலான ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது.
மத்திய வங்கியானது விசா, மாஸ்டர் அட்டை மற்றும் இதர அட்டைத் திட்டங்களானது மூன்றாம் தரப்பு பணவழங்கீடு செயலிகளுக்கும் இந்த அடையாளத் தகவல்களை வழங்க அனுமதித்துள்ளது.