TNPSC Thervupettagam

அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு

January 28 , 2024 302 days 619 0
  • உகாண்டாவின் கம்பாலா நகரத்தில் அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "பகிரப்பட்ட உலகளாவிய வளத்திற்கான உள்ளார்ந்த ஒத்துழைப்பு" என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாடு பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
  • அஜர்பைஜானிடமிருந்து தலைமைப்  பொறுப்பினைப் பெற்ற உகாண்டா அரசு 2027 ஆம் ஆண்டு வரை இதன் தலைவராக செயல்படும்.
  • இந்த உச்சி மாநாடு கம்பாலா பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த நிகழ்வின் போது, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
  • 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உகாண்டாவின் சர்வாதிகாரியான இடி அமீன், உகாண்டாவில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் பிற ஆசியர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
  • சுமார் 80,000 இந்தியர்கள் 90 நாட்களுக்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • தற்போது, உகாண்டாவின் மக்கள்தொகையில் 0.1%க்கும் குறைவான பங்கினைக் கொண்டுள்ள இந்தியர்கள்/இந்திய வம்சாவளி மக்கள் உகாண்டாவின் நேரடி வரிகளில் 70% பங்கினை அளிக்கின்றனர்.
  • தற்போது, அணிசேரா இயக்கம் ஆனது 120 உறுப்பினர் நாடுகள், 17 பார்வையாளர் நாடுகள் மற்றும் 10 பார்வையாளர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • அணிசேரா இயக்கமானது நிரந்தர செயலகம் அல்லது முறையான ஸ்தாபன சாசனம், சட்டம் அல்லது ஒப்பந்தம் என எதையும் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்