TNPSC Thervupettagam

அணிவகுப்புக் காட்சி வாகனம் குறித்த புதிய குடியரசு தின ஒப்பந்தம்

January 15 , 2024 187 days 145 0
  • பாதுகாப்பு அமைச்சகம் ஆனது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு (UT) தங்கள் அணிவகுப்புக் காட்சி வாகனங்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பிற்காக மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து தோராயமாக 15 அணிவகுப்புக் காட்சி வாகனங்கள் தேர்ந்து எடுக்கப் படுகின்றன.
  • எனவே ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு வாய்ப்பைப் பெறும்.
  • இதுவரை கர்நாடகா உட்பட 28 மாநிலங்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • 2015 முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா தனது அணிவகுப்புக் காட்சி வாகனத்தினைக் காட்சிப்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்