TNPSC Thervupettagam

அணி சேரா இயக்க மாநாடு

May 7 , 2020 1571 days 4019 0
  • இந்தியப் பிரதமர் அணிசேரா இயக்க மாநாட்டில் (NAM - Non-Aligned Movement) காணொளி வாயிலாக இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார்.
  • இது NAMன் தற்போதைய தலைமை நாடான  அசர்பைஜானின் அதிபரான இஹாம் அவியேவ் என்பவரின் முன்னெப்பினால் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “கோவிட் – 19 தொற்றிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைதல்” என்பதாகும்.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து, அவரால் கலந்து கொள்ளப்பட்ட முதலாவது NAM மாநாடு இதுவாகும்.
  • 2016 ஆம் ஆண்டு மாநாடு வெனிசுலா நாட்டிலும் 2019 ஆம் ஆண்டு மாநாடு அசர்பைஜான் நாட்டிலும் நடத்தப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டில், ஈரானின் டெக்ரான் நகரில் நடைபெற்ற NAM மாநாட்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.
NAM பற்றி
  • NAM என்பது 120 நாடுகள் கொண்ட வளரும் நாடுகளின் அணிசேரா இயக்க மன்றமாகும்.
  • இது எந்தவொரு வலிமை மிக்க கூட்டமைப்புகளுடனோ அல்லது அதற்கு எதிராகவோ கூட்டணி அமைக்காது.
  • ஐக்கிய நாடுகளுக்குப் பிறகு, NAM ஆனது அதிக  எண்ணிக்கையிலான உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • NAM-ல் உறுப்பினராக உள்ள நாடுகள் ஐக்கிய நாடுகளில் உள்ள உறுப்பு நாடுகளில் ஏறத்தாழ மூன்றில் 2 பங்கு நாடுகள் உள்ளன. இது உலக மக்கள் தொகையில் 55% அளவைக் கொண்டுள்ளது.
  • இந்த அமைப்பானது 1955 ஆம் ஆண்டின் பாண்டூங் கருத்தரங்கில் ஏற்படுத்த ஒப்புக் கொள்ளப் பட்டது.
  • இது 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 
  • இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லேவியாவின் அதிபரான ஜோசப் ப்ரோஸ் டிட்டோ மற்றும் எகிப்து நாட்டு அதிபரான கமால் அப்துல் நாசர் ஆகியோர் இந்த முன்னெடுப்பின் முக்கியமான தலைவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்