TNPSC Thervupettagam

அணுஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 29

August 30 , 2018 2220 days 679 0
  • ஐ.நா. பொதுச் சபையின் 64வது அமர்வின் போது ஆகஸ்ட் 29 ஆம் தேதியை அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • அணுஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினத்தின் தொடக்க விழா 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • அணுஆயுத சோதனையை ஒழிப்பதற்கான முக்கிய செயல்முறை விரிவான அணுஆயுத சோதனை தடை ஒப்பந்தமாகும் (CTBT – Comprehensive Nuclear – Test Ban Treaty)
  • இது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இதுநாள் வரை 183 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை 166 நாடுகள் உறுதி செய்துள்ளன.
  • 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் CTBT கையெழுத்து இடுவதற்காக தொடங்கப்பட்ட பின்பு 10 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
  1. இந்தியா 1998-ல் இரண்டு சோதனைகளை நடத்தியுள்ளன. (மேலும் இந்தியாவானது அமைதியானது என்று கூறப்படும் ஒரு   அணு ஆயுத சோதனையை 1974-ல் நடத்தியது)
  2. பாகிஸ்தான் 1998-ல் இரண்டு சோதனைகளை நடத்தியுள்ளன.
  3. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு 2001, 2009, 2013, 2016 ஆகிய ஆண்டுகளில் சோதனைகளை நிகழ்த்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்