மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசியச் சங்கமானது சமீபத்தில் “அணுகக் கூடிய இந்தியாவிற்கான புத்தாக்கம்” என்ற ஒரு பிரச்சாரத்தை அறிமுகப் படுத்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறை ஆகியன இந்த முயற்சியில் உள்ள மற்ற பங்குதாரர்கள் ஆவர்.
செயற்கை நுண்ணறிவு, மைக்ரோசாஃப்ட் கிளவுட் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளின் சிக்கல்களைத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசியச் சங்கத்தின் மேற்பார்வையில் தேசியத் திறன்மிகு அரசு நிறுவனம் மற்றும் இந்தியத் தரவு பாதுகாப்புக் குழுவானது இயங்குகிறது.