லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் (எல்.எல்.என்.எல்) உலகின் மிகப்பெரிய லேசரை முதன்முறையாக அணுக்கரு இணைவுத் தொடர்வினையை உருவாக்கப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளது.
சூரியனை இயக்கும் செயல்முறையைப் பிரதிபலிக்கும் இந்தத் தொடர்வினை எனபது உற்பத்தி செய்வதற்கு எடுத்துக் கொண்டதை விட அதிக ஆற்றலை உருவாக்கியது.
அணுக்கரு இணைவு அதன் ஆதரவாளர்களால் தூய்மையான, மிகுதியான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆற்றல் மூலமாகக் கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் 2.05 மெகாஜூல் ஆற்றலை வழங்க 192 அதிசக்தி வாய்ந்த லேசர்களைப் பயன்படுத்தி அதன் விளைவாக 3.15 மெகா ஜூல் இணைவு ஆற்றல் வெளியீட்டைப் பெற்றனர்.