ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் கார்பன்-14 வைர மின்கலத்தினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
கதிரியக்கக் கரிமக் காலக் கணிப்பு எனும் ஒரு முறையில் பொதுவாகப் பயன்படுத்தப் படும் கார்பன்-14 எனப்படுகின்ற கதிரியக்க ஐசோடோப்பின் கதிரியக்கச் சிதைவு மின்சாரம் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கார்பன்-14 ஆனது சுமார் 5,700 ஆண்டுகள் என்ற அரை ஆயுளைக் கொண்டிருப்பதால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த மின்கலமானது தனது ஆற்றலில் பாதியைத் தக்க வைத்துக் கொள்ளும்.
இந்த மின்கலங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் கார்பன்-14 ஆனது, அணுக்கருப் பிளவு உலைகளின் வினை விளை உற்பத்திப் பொருளான கிராஃபைட் தொகுதிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
ஐக்கியப் பேரரசு மட்டும் சுமார் 95,000 டன் கிராஃபைட் தொகுதிகளைக் கொண்டு இருக்கிறது.