இந்திய அரசாங்கம் ஆனது, T.V. சோமநாதன் மற்றும் மனோஜ் கோவில் ஆகியோரை உள்ளடக்கிய அணுசக்தி ஆணையத்தினை (AEC) மறுசீரமைத்துள்ளது.
அணுசக்தித் துறையின் செயலாளர் அஜித் குமார் மொஹந்தி மறுசீரமைக்கப்பட்ட AEC ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த ஆணையத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ரா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சோமநாதன் மற்றும் கோவில் ஆகியோர் பதவிவழி உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் விவேக் பாசினும் இந்த ஆணையத்தின் பதவி வழி உறுப்பினராக உள்ளார்.