புதிய அணுசக்தி ஈர்ப்பு குண்டினை உருவாக்கும் அமெரிக்காவின் திட்டங்கள் B61-13 என குறிப்பிடப்படுகிறது.
இந்த குண்டுகள் வழிகாட்டுதல் அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஒரு உந்து விசை சார்ந்த பாதையைப் பின்பற்றுகின்றன.
இந்தப் புதிய வெடிகுண்டு ஆனது, 360 கிலோடன்கள் எடை கொண்டதாக மதிப்பிடப் பட்டுள்ள நிலையில் இது ஹிரோஷிமாவை அழித்த குண்டினை விட சுமார் 24 மடங்கு சக்தி வாய்ந்தது.
இந்த ஏவுகணையில் ஏற்றப்பட்ட ஈர்ப்பு வெடிகுண்டுகள் ஆனது, இலக்கை நோக்கிப் பறப்பதற்குப் பதிலாக புவியீர்ப்பு விசையால் தரை நோக்கி இழுக்கப் படுகின்றன.
இதில், ஒரு குண்டுவீச்சு விமானம் அல்லது விமானம் இலக்குப் பகுதியின் மீது பறந்து அந்தக் குண்டை வீசுகிறது.