TNPSC Thervupettagam

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர்

November 29 , 2018 2107 days 607 0
  • புகழ்பெற்ற விஞ்ஞானியான நாகேஸ்வரராவ் குண்டூர் என்பவரை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board-AERB) தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. AERB-ன் தலைவராக இவரது நியமனம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும்.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்
  • இது 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மஹாராஷ்டிராவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • இது 1962 ஆம் ஆண்டின் அணுசக்தித் சட்டத்தின் பிரிவு 27-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்திய குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்டது.
  • இந்தியாவில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குத் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அயனியாக்கும் கதிர்வீச்சு மற்றும் அணுசக்தியைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • தற்போது இது முழுநேர தலைவர், ஒரு அலுவல்வழி உறுப்பினர், 3 பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்