அணுசக்தி மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கும், 2047 ஆம் ஆண்டிற்குள் மேம்பட்ட அணுசக்தி மீதான தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகளாவிய முன்னணித்துவம் பெற்றதாக நிலைநிறுத்துவதற்கும் அணுசக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2047 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 100 GW அணுசக்தித் திறனை உருவாக்குவது நமது நாட்டின் ஆற்றல் மாற்ற முயற்சிகளுக்கு அவசியமாகும்.
இந்த இலக்கினை அடைவதற்காக வேண்டி தனியார் துறையுடனான ஒரு தீவிரமான கூட்டாண்மைக்காக, அணுசக்திச் சட்டம் மற்றும் அணு சேதத்திற்கான உரிமையியல் பொறுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் சிறிய மாதிரி உலைகள் (SMRs) குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஓர் அணுசக்தி திட்டம் ஆனது அமைக்கப்படும்.
உள்நாட்டிலேயே என்று உருவாக்கப்பட்ட குறைந்தபட்சமாக 5 SMR உலைகள் 2033 ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
1962 ஆம் ஆண்டின் அணுசக்திச் சட்டமானது, இந்தியாவில் தனியார் துறை அணு மின் உற்பத்தியைத் தடை செய்கிறது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான NPCIL மற்றும் பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் அணு மின் உற்பத்தி நிலையங்களைச் சொந்தமாக வைத்திருக்கவும் அவற்றை இயக்கவும் வேண்டி சட்டப் பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டு அணு சேதத்திற்கான உரிமையியல் பொறுப்புச் சட்டம் ஆனது, எந்த ஒரு அணு விபத்திற்குமான பொறுப்பை அணுசக்தி நிலைய இயக்க அமைப்பின் மீது நிர்ணயிக்கிறது மற்றும் இயக்க அமைப்பின் மொத்தப் பொறுப்பை வரையறுக்கிறது.
ஆனால் இது, அணு உலை வழங்கீட்டு நிறுவனத்திடம் இருந்து எவ்வித வரம்புமின்றி அணுமின் நிலைய இயக்க அமைப்பானது சட்டப்பூர்வ உதவியைப் பெற்றிட வேண்டி அனுமதிக்கிறது.
இந்திய நாடானது, தற்போது 8180 மெகாவாட்டாக உள்ள தனது அணுசக்தித் திறனை 2031-2032 ஆம் ஆண்டிற்குள் 22,480 மெகாவாட்டாக விரிவுபடுத்துவதற்காக செயலாற்றி வருகிறது.