இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஜனவரி 01 ஆம் தேதியன்று ஓர் இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் தங்களது அணுமின் நிலையங்களின் பட்டியலைப் பரிமாறிக் கொண்டன.
இந்த ஒப்பந்தமானது இரு தரப்பினரும் தங்களது அணுசக்தி ஆலைகள் மீது தாக்குதல் மேற்கொள்வதை தடுக்கிறது.
இதற்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திடப் பட்டு, 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
இதன்படி, ஒவ்வோர் ஆண்டிலும் ஜனவரி மாதத்தின் முதல் தேதியன்று இந்த ஒப்பந்தத்தின் கீழ் உட்படக்கூடிய அணுசக்தி உலைகள் மற்றும் மையங்கள் பற்றி இரு நாடுகளும் பரஸ்பரமாக தகவல் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் 33வது பட்டியல் பரிமாற்றம் இது ஆகும்.
முதல் பரிமாற்றம் ஆனது 1992 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நடைபெற்றது.
மேலும், இருநாடுகளிடமும் சிறையில் உள்ள கைதிகளின் பட்டியல்களும் பரிமாறப் பட்டன.
47 பொதுமக்கள் மற்றும் 184 மீனவர்கள் உட்பட மொத்தம் 231 இந்தியக் கைதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்.
337 பொதுமக்கள் மற்றும் 81 மீனவர்கள் உட்பட மொத்தம் 418 பாகிஸ்தானியர்கள் இந்தியச் சிறைகளில் உள்ளனர்.