28-வது அணுப்பொருட்கள் வழங்குநர் குழுவின் (Nuclear Suppliers group-NSG) பேரவைக் கூட்டம் லாத்வியா நாடானது 2018-19ம் ஆண்டிற்கான NSG-யின் தலைவராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டின் ஜீர்மாலா என்ற நகரத்தில் நடத்தப்பட்டது.
இதன் மூலம் NSG-க்கு தலைமைத் தாங்கும் முதல் பால்டிக் நாடாக லாத்வியா உருவாகி உள்ளது.
இந்தியாவின் NSG உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை 2016ம் ஆண்டின் சியோல் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்த போது, சீனாவையும் சேர்த்து NSG-யின் சில உறுப்பு நாடுகளால் அது எதிர்க்கப்பட்டது.
NSG இந்தியாவின் ஆபரேஷனான சிரிக்கும் புத்தர் என்ற வெற்றிகரமான அணுசக்தி சோதனைக்குப் பிறகு, அதற்கு எதிர்வினையாக அணுசக்தியை ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவும், தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.