TNPSC Thervupettagam

அணு ஆயுதக் கட்டுப்பாடுகள்

April 1 , 2020 1607 days 523 0
  • ஈரான் மீதான 4 அணு ஆயுதக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா புதுப்பித்து உள்ளது.
  • அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் மேம்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டன.
  • ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை மிகப் பெரிய அளவில் பாதிக்கும்.
  • இது ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதன் மூலம் மத்திய ஆசியாவை அடைவதற்கான இந்தியாவின் திட்டத்தைப் பாதிக்கும்.
  • 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான கூட்டுச் செயல்திட்டத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரானில் உள்ள அதிக அளவிலான யுரேனியம் ஈரானிலிருந்து வெளியேற்றப்படும்.
  • ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அணு ஆயுத நடவடிக்கைகள் சர்வதேசச் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்