TNPSC Thervupettagam

அணு ஆயுதங்களின் தடை மீதான ஒப்பந்தம்

January 29 , 2021 1327 days 790 0
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று ”அணு ஆயுதங்களின் தடை மீதான ஒப்பந்தம்” எனப்படும் அணு ஆயுதங்கள் மீதான தடைக்கான முதலாவது ஒப்பந்தமானது நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தமானது அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்கும் நோக்கம் கொண்ட, சட்டப்பூர்வமாக  அனைவரையும் கட்டுப்படுத்தும் முதலாவது ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
  • இது ஐக்கிய நாடுகளின் 120 உறுப்பு நாடுகளினால் ஆதரிக்கப்பட்டது.
  • எனினும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஐக்கிய நாடுகளின் 9 உறுப்பு நாடுகளும் இதற்கு ஆதரவளிக்கவில்லை.
  • அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்சு, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகியவை இந்த 9 நாடுகளாகும்.
  • இந்தியாவானது அணு ஆயுதங்களின் தடை மீதான ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வில்லை.
  • இந்தியாவானது அணு ஆயுத நாடுகளுக்கு எதிராக ”முதலில் பயன்படுத்துவதில்லை” என்ற கொள்கையையும் அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையையும் கடைபிடிக்க உறுதி பூண்டுள்ளது.
  • இந்தியாவானது அணுப் பிளவுப் பொருட்கள் நிறுத்த ஒப்பந்தம் குறித்த சமாதானப் பேச்சிலும் ஈடுபட உறுதி பூண்டுள்ளது.
  • FMCT (Fissile Material Cut Off Treaty) என்பது முன்மொழியப்பட்டுள்ள ஓரு சர்வதேச ஒப்பந்தம் ஆகும்.
  • இந்த ஒப்பந்தமானது செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உற்பத்தியைத் தடை செய்கின்றது.
  • மேலும் இந்தியாவானது அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் மற்றும் விரிவான அணு ஆயுதசோதனைத் தடை ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்