அணு ஆயுதம் இல்லாத எதிர்காலத்திற்கான விருதுகள் 2025
January 19 , 2025 3 days 25 0
அணுசக்தி இல்லாத உலகத்தை நோக்கிய தனது முயற்சிகளுக்காக என்று அணு ஆயுத எதிர்ப்புப் பிரிவில் 2025 ஆம் ஆண்டு அணு ஆயுதம் இல்லாத ஒரு எதிர்காலத்திற்கான விருதிற்கு P. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிரான மக்கள் போராளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
விருது பெற்ற மற்றவர்கள்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்சியா கோம்ஸ் டி ஒலிவேரா மற்றும் நோர்பர்ட் சுச்சானெக்.
தி சொல்யூஷன் விருது ஆனது ஜிம்பாப்வேயைச் சேர்ந்த எட்விக் மாட்ஸிமுரேவுக்கு வழங்கப்பட உள்ளது.
கௌரவ வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் ஆனது அணுசக்தி எதிர்ப்பு ஆர்வலர் ஜோனா மேசி மற்றும் மறைந்த க்ளீ பெனாலி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் ஆனது 1998 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் கிளாஸ் பீகெர்ட்டால் நிறுவப் பட்டது.
இந்த விருதுகள் அணு ஆயுதங்கள், அணுசக்தி மற்றும் யுரேனிய சுரங்கத்தை உலகில் இருந்து ஒழிக்க போராடுபவர்களைக் கௌரவிக்கின்றன.