கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பதற்கும், இந்தியாவில் புதிய இடங்களில் ரஷ்யா வடிவமைத்த அணுமின் நிலையங்களை அமைப்பதற்கும் ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பான 2008 ஆம் ஆண்டு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரு நெறிமுறையில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன.
ரஷ்ய அணுசக்தி நிறுவனம் ஆனது 1,000 MWe திறன் கொண்ட இரண்டு VVER எனப்படும் ஒருவகை அழுத்த கன நீர் அணு உலைகளை உருவாக்கியுள்ளது என்பதோடு, மேலும் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளையும் கட்டமைத்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் மொத்தம் 6,000 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில், முதல் உலையானது 2013 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது என்ற நிலையில், இரண்டாவது உலையானது 2016 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது.
மீதமுள்ள நான்கு ஆலைகள் கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன.
இந்த உலைகள் அனைத்தும் VVER-1000 வகுப்பைச் சேர்ந்தவை ஆகும்.
இது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் உருவாக்கப்பட்ட நீரை குளிர்விப்பானாகவும், வினைவேக மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஆற்றல் உற்பத்தி உலையின் ஒரு வடிவமைப்பாகும்.