TNPSC Thervupettagam

அணை பாதுகாப்பு மசோதா 2018

June 21 , 2018 2223 days 655 0
  • மத்திய அமைச்சரவை குழுவானது 2018-ஆம் ஆண்டின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை (Dam Safety Bill, 2018)  நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த மசோதாவானது நாட்டின் அனைத்து மாநிலங்களும், ஒன்றியப் பிரதேசங்களும் ஒரே மாதிரியான சீரான (Uniform) அணைகள் பாதுகாப்பு செயற்நடைமுறைகளை (Dam safety procedures) ஏற்றுக் கொள்ள வகை செய்கின்றது. அதனால் அணைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பயன்களும் பாதுகாக்கப்படும்.
  • நாடு முழுவதும் ஒரே சீரான அணைப் பாதுகாப்பு செயற் நடைமுறையானது மனித வாழ்வு, கால்நடைகள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் உதவும்.
  • இந்த மசோதாவானது அணைகளின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, நாட்டில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளுக்கும்  முறையான கண்காணிப்பு (Surveillance), பராமரிப்பு (Maintenance), செயல்பாடு, ஆய்வு (Inspection) ஆகியவற்றை வழங்கும்.

  • மேலும் இந்த மசோதாவானது,
    • அணைகள் பாதுகாப்பு மீதான தேசிய குழு (National Committee on Dam Safety)
    • அணைகள் பாதுகாப்பு மீதான மாநில குழு (State Committee on Dam Safety)

ஆகியவற்றை அமைப்பதற்கு வழிகோலுகின்றது.

  • இந்த குழுக்களானது அணை பாதுகாப்புக் கொள்கைகளை (Dam safety policies) மேம்படுத்தும். மேலும் அணைகளின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய ஒழுங்குமுறைகளைப் பரிந்துரைக்கும்.
  • மேலும் இந்த மசோதாவானது, ஓர் ஒழுங்குமுறை அமைப்பாக (Regulatory body) தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தை (National Dam Safety Authority) அமைக்கவும் வழிகோலுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்