TNPSC Thervupettagam

அண்டத்திற்கு வெளியே அமைந்த கருந்துளையிலிருந்து முனைவாக்க உமிழ்வுகள்

December 17 , 2023 216 days 183 0
  • குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் அண்டத்திற்கு வெளியே அமைந்த கருந்துளையில் ஊடுகதிர் முனைவாக்கத்தினை கண்டறிந்துள்ளனர்.
  • ஊடுகதிர் (X-கதிர்) முனைவாக்கமானி எனப்படும் நுட்பத்தின் மூலம் பால்வெளி அண்டத்திற்கு அப்பால் இருக்கும் கருந்துளை மூலத்திலிருந்து முனைவாக்க உமிழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
  • ஊடு கதிர் முனைவாக்கம் ஆனது, கருந்துளை மூலங்களின் திரளாக்கத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கான வழி முறையை வெளிப்படுத்துகிறது.
  • கருந்துளைகளுக்கு அருகில் இருந்து கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய இது ஒரு தனித்துவமான கண்காணிப்பு நுட்பமாகும்.
  • LMC X-3 சூரியனை விட 10,000 மடங்கு சக்தி வாய்ந்த ஊடு கதிர்களை வெளியிடுகிறது.
  • இந்த ஊடு கதிர்கள் கருந்துளைகளைச் சுற்றியுள்ள பொருட்களுடன், குறிப்பாக அவை சிதறி அவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது துருவமுனைவாக்க பண்புகளை (அச்சு மற்றும் கோணம்) மாற்றுகிறது.
  • சீரற்ற பெருவிண்மீன் தொகுதி X-3 (LMC X-3) என்பது கருந்துளை மற்றும் சூரியனை விட அதிக வெப்பமான, பெரிய மற்றும் அதிக எடை கொண்ட ஒரு "சாதாரண" நட்சத்திரம் கொண்ட இரும விண்மீன் அமைப்பாகும்.
  • இது பூமியிலிருந்து சுமார் 200,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பால் வெளி அண்டத்தின் துணைக்கோள் மண்டலத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்