அண்டார்டிகாவின் கடல் பனிக்கட்டி ஆனது, 1991-2020 ஆம் ஆண்டில் இருந்த சராசரி அளவிலிருந்து ஆறுக்கும் மேற்பட்ட புள்ளிகள் வரை (SD) விலகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, கடல் பனியின் பரப்பளவு சுமார் 14.2 மில்லியன் சதுர கிலோமீட்டராக இருந்தது.
ஆண்டின் இந்தக் காலத்தில் கடல் பனிப்பரவலின் அளவு ஆனது சுமார் 16.7 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், கடல் பனியின் பரப்பளவு 11.02 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்த நிலையில், இது 1991-2020 ஆகிய காலக் கட்டத்தில் இருந்த சராசரி அளவிலிருந்து 18.13 சதவீதம் குறைந்துள்ளது .
இந்த மதிப்பானது கடந்த 45 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைவான ஒரு அளவாக தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
அண்டார்டிகா பகுதியானது, செயற்கைக் கோள் செயல்பாட்டுச் சகாப்தத்தின் ஒட்டு மொத்த நீண்ட காலச் சராசரியுடன் ஒப்பிடும் போது சுமார் 2.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கடல் பனிப் பரவலை இழந்துள்ளது.