TNPSC Thervupettagam

அண்டார்டிகாவின் பனிச் சரிவு ஆபத்து

September 17 , 2024 67 days 127 0
  • மேற்கு அண்டார்டிகாவின் பனிப் பாறைகள் இடிந்து விழத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை உருவகப் படுத்தச் செய்வதற்காக என்று அறிவியல் ஆய்வாளர்கள் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • உருகும் பனிக்கட்டிகள் மிகவும் விரைவாக கடலில் வீழும் என்பதால் பாறைகள் பெரிய இடரை ஏற்படுத்தும் அளவுக்கு உயரமாக இருப்பதைத் தடுக்கும் வகையில் அமையும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.
  • ஆனால், நாம் நினைத்ததை விட பேரழிவு நிகழ்விற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கலாம்.
  • சில சமயங்களில் மிகவும் பெரிய பனிக்கட்டிகள் கண்டத்தில் இருந்து பிரிந்து கடலில் மிதக்கின்றன.
  • இந்த மிதக்கும் பனிக்கட்டிகள் உருகும் போது, ​​அவை மிகவும் உயரமான மற்றும் நிலையற்ற பனிப்பாறைகளை விட்டுச் செல்லும்.
  • இந்தப் பாறைகள் இடிந்து விழுந்தால், பெரிய பனிக்கட்டிகள் கடலில் விழும், இதனால் உலகளவில் கடல் மட்டம் மிக வியத்தகு அளவில் உயரும் என்று அறிவியலாளர்கள் கவலையுறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்