அண்டார்டிக் தீபகற்பம் அயல்நாட்டு உயிரினங்களின் அறிமுகத்தினால் அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய பகுதியாகும்.
அண்டார்டிகாவில் கரை ஒதுங்கும் பொருள்கள் அயல் இனம் சார்ந்த மலர் மற்றும் விலங்கினங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.
அவை அந்தக் குளிர்ந்த சூழ்நிலையில் உயிர் வாழக் கூடியதாக இருந்தால், அவை உள்நாட்டு இனங்களை அழிக்கும்.
மெக்குவாரி தீவு ஆனது அண்டார்டிகாவுடன் மிக அதிகத் தொடர்பை கொண்டுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து கெர்குலென் தீவுகள் மற்றும் தெற்கு ஜார்ஜியா ஆகியவை கொண்டுள்ளன.
ஆஸ்திரேலியா (டாஸ்மேனியா) அண்டார்டிகாவுடன் மிகவும் குறைந்த தொடர்பைக் கொண்டுள்ளது என்ற ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் கோஃப் தீவு ஆகியவை உள்ளன.