TNPSC Thervupettagam

அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனிப் பரவல் 2023

March 21 , 2023 620 days 308 0
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனிகளானது 1979 ஆம் ஆண்டில் செயற்கைக் கோள் பதிவு தொடங்கியதிலிருந்து இது வரையில் காணப்படாத அளவிற்கு மிகக் குறைந்த அளவை எட்டியது.
  • இந்தப் புள்ளிவிவரங்களை அமெரிக்காவில் அமைந்துள்ள தேசியப் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டித் தரவு மையம் (NSIDC) வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதியன்று, அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனிகளானது 1.79 மில்லியன் சதுர கி.மீ. (691,000 சதுர மைல்) என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது.
  • இது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதியன்று, பதிவான முந்தைய மிகக் குறைவான அளவை விட 130,000 சதுர கிலோமீட்டர்கள் (50,000 சதுர மைல்கள்) என்ற அளவில் குறைவாக உள்ளது.
  • 2 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் கீழே பனிக்கட்டிகளின் இருப்பு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்