2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனிகளானது 1979 ஆம் ஆண்டில் செயற்கைக் கோள் பதிவு தொடங்கியதிலிருந்து இது வரையில் காணப்படாத அளவிற்கு மிகக் குறைந்த அளவை எட்டியது.
இந்தப் புள்ளிவிவரங்களை அமெரிக்காவில் அமைந்துள்ள தேசியப் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டித் தரவு மையம் (NSIDC) வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதியன்று, அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனிகளானது 1.79 மில்லியன் சதுர கி.மீ. (691,000 சதுர மைல்) என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது.
இது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதியன்று, பதிவான முந்தைய மிகக் குறைவான அளவை விட 130,000 சதுர கிலோமீட்டர்கள் (50,000 சதுர மைல்கள்) என்ற அளவில் குறைவாக உள்ளது.
2 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் கீழே பனிக்கட்டிகளின் இருப்பு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.