TNPSC Thervupettagam

அண்டார்டிக் ஓசோன் துளை

January 13 , 2021 1417 days 712 0
  • ஓசோன் அடுக்கில் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய இடைவெளி கொண்டிருந்த ஒரு அண்டார்டிக் ஓசோன் துளையானது மூடப்பட்டுள்ளது.
  • அண்டார்டிக்கின் மீது ஆண்டுதோறும் நிகழும் ஓசோன் துளையானது 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் நடுவில் இருந்து வேகமாக வளர்ந்து அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் பெரியதானது.
  • இந்தத் துளையின் விரிவாக்கம் ஒரு வலுவான, நிலையான மற்றும் குளிர் துருவ சுழற்சி மற்றும் வளியடுக்கு மண்டலத்தில் மிகவும் குளிரான வெப்பநிலை ஆகியவற்றால் இயக்கப் படுகிறது.
  • இதே வானிலைக் காரணிகள் ஒரு சரித்திர நிகழ்வான 2020 ஆம் ஆண்டின் ஆர்க்டிக் ஓசோன் துளை அடைபடுதல் என்ற நிகழ்விற்கும் பங்களித்தன.
  • ஒரு துருவ சுழற்சி என்பது துருவப் பிராந்தியங்களில், குறைந்த அழுத்தப் பகுதியான, மற்றும் குளிர்ந்த காற்றின் ஒரு பெரும் பரப்பாகும்.
  • குளிர்காலத்தில், வட துருவத்தில் உள்ள துருவ சுழற்சி விரிவடைந்து, குளிர்ந்த காற்றை தெற்கு நோக்கி அனுப்புகிறது.
  • ஓசோன் துளை என்பது ஓசோன் படலத்தை மெல்லியதாக மாற்றுவதாகும்.
  • குளிர்ச்சியான வெப்பநிலையால் இது தனது அளவில் பலப்படுத்தப் படுகின்றது.
  • இடை அடுக்கு மண்டலத்தில் வெப்பநிலை உயரத் தொடங்கும் போது, ஓசோன் விரிவடைதல் குறைந்து, துருவ சுழற்சியானது  பலவீனமடைகிறது.
  • மனிதனால் உருவாக்கப் பட்ட ரசாயனங்கள் இடை அடுக்கு மண்டலத்தில் உள்புகுந்து துருவ சுழற்சி உள்ளே குவிகின்றன.
  • சூடான வெப்பநிலை ஆதிக்கம் செலுத்துவதால் இது தனது அளவில் சுருங்கத் தொடங்குகிறது.
  • துருவ சுழலானது ஓசோன் அடுக்கின் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைத்து இருப்பதால் 2020 ஆண்டின் அண்டார்டிக் துளையானது வழக்கத்திற்கு மாறாக இருக்க வைக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்