அண்டார்டிக் கடல் பனிப்பரவல் ஆனது, அதன் வருடாந்திர அதிகபட்ச அளவான 16.96 மில்லியன் சதுர கிலோமீட்டர்களை (6.55 மில்லியன் சதுர மைல்) எட்டியுள்ளது.
1979 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதிவான கடல் பனிப் பரவலில் மிகக் குறைந்த அளவு கடல் பனிப் பரவல் இதுவே ஆகும்.
1986 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய குறைந்த அளவை விட குறைவாக இந்த ஆண்டு 1.03 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் (398,000 சதுர மைல்கள்) உள்ளது.
இது 1981 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான சராசரி அண்டார்டிக் அதிகபட்ச பனிப் பரவலை விட 1.75 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் (676,000 சதுர மைல்கள்) குறைவாக உள்ளது.
உருகிய கடல் பனியின் அளவு 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முந்தைய குறைவான அளவை - எகிப்தை விட பெரிய பகுதி - விட சுமார் 386,000 சதுர மைல்கள் குறைவாக இருந்தது.